.

.

2 Nov 2013

சுய மருத்துவம்

சுய மருத்துவம் (செல்ப்மேடிகஷன்)என்றால் என்ன?



                                இன்று பலர் உடலுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் முதலில் தனக்கு தெரிந்த சில மருந்துகளை கடையிலோ அல்லது வீட்டிலோ உள்ள மருந்தை உபயோகித்து மறுநாள் தனது நண்பர்கள் சொல்லும் மருந்தை எடுப்பார்கள் அப்பவும் தீரவில்லை என்றால் மருந்து கடை காரரிடம் கேட்பார்கள் அவர்களும் எதோ அவர்களுக்கு தெரிந்த மாத்திரைகளை வழங்குவார் அதிலும் சுகமாகவில்லை என்ற பிறகே டாக்டரை அணுகுவார்கள் 

                                 அதற்குள் அவரது உடலின் பிரச்சனையும் அதிகமாகி விடும் பணம் செலவு செய்தும் பலன் இல்லாமல் போய்விடும்.இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் இந்த மாத்திரைகளை தெரியாமல் உபயோகிப்பதால் உடலில் உள்ள நோயை தீர்க்க போய் இலவசமாக மற்றொரு புது விளைவை ஏற்படுத்திக்கொள்கிறோம்,
                                  அதேபோல என் அப்பாவுக்கு போன வாரம் வயிற்றுபோக்கு இந்தமாதிரையை போட்டார் சரியயிடுசு மீதி உள்ள மருந்தை,அவரது தம்பிக்கு அதே பிரச்சனைக்காக  கொடுப்பார்,இதில் மேலோட்டமா பார்த்தல் எந்த தப்பும் இருக்கிற மாதிரி தெரியாது ஏனென்றால் இரண்டு பேரின் வயதும் ஏறக்குறைய ஒன்றாக இருக்கலாம் ஆனால் இருவரது உடல் நிலையும் ஒன்றாகவே இருக்கும் என அவர்களாகவே கணிக்க முடியாது.
                                        ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளுனரால் மட்டுமே கணிக்க முடியும்.எனவே நீங்களாகவே மருத்துவம் செய்துக்கொல்லாதீர்கள் 
திரும்பவும் இதை ஏன் சொல்கிறேன் என்றால் உங்கள் உடல் மேலும் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளது.
                                          இன்னுமொரு தகவல் உங்களுக்கு பல நாள் முன் வழங்கிய மருந்தை  மீண்டும் அதே பிரச்சனைக்காக நீங்களே எடுத்துகொள்வதும் சரியாகாது, மேலே சொன்ன ஒருவரிடம் சிறிய ஆலோசனை தேவை,இதனால் ஒன்றும் பாதிப்பு வந்துவிடாதே
                                           நீங்கள் கேட்கலாம் அட என்னப்பா இது ஒரு தலை வலி வந்தால் கூட கேட்டு தான் ஆகா வேண்டுமா என்று.அதாவது ஒரு சில நேரங்களில்,  விளம்பரம் செய்யப்படுகின்ற மருந்துகளை மற்ற மருந்தோடு சேர்க்காமல் தனியாக வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்