.

.

2 Nov 2013

சுய மருத்துவம்

சுய மருத்துவம் (செல்ப்மேடிகஷன்)என்றால் என்ன?



                                இன்று பலர் உடலுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் முதலில் தனக்கு தெரிந்த சில மருந்துகளை கடையிலோ அல்லது வீட்டிலோ உள்ள மருந்தை உபயோகித்து மறுநாள் தனது நண்பர்கள் சொல்லும் மருந்தை எடுப்பார்கள் அப்பவும் தீரவில்லை என்றால் மருந்து கடை காரரிடம் கேட்பார்கள் அவர்களும் எதோ அவர்களுக்கு தெரிந்த மாத்திரைகளை வழங்குவார் அதிலும் சுகமாகவில்லை என்ற பிறகே டாக்டரை அணுகுவார்கள் 

                                 அதற்குள் அவரது உடலின் பிரச்சனையும் அதிகமாகி விடும் பணம் செலவு செய்தும் பலன் இல்லாமல் போய்விடும்.இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் இந்த மாத்திரைகளை தெரியாமல் உபயோகிப்பதால் உடலில் உள்ள நோயை தீர்க்க போய் இலவசமாக மற்றொரு புது விளைவை ஏற்படுத்திக்கொள்கிறோம்,
                                  அதேபோல என் அப்பாவுக்கு போன வாரம் வயிற்றுபோக்கு இந்தமாதிரையை போட்டார் சரியயிடுசு மீதி உள்ள மருந்தை,அவரது தம்பிக்கு அதே பிரச்சனைக்காக  கொடுப்பார்,இதில் மேலோட்டமா பார்த்தல் எந்த தப்பும் இருக்கிற மாதிரி தெரியாது ஏனென்றால் இரண்டு பேரின் வயதும் ஏறக்குறைய ஒன்றாக இருக்கலாம் ஆனால் இருவரது உடல் நிலையும் ஒன்றாகவே இருக்கும் என அவர்களாகவே கணிக்க முடியாது.
                                        ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளுனரால் மட்டுமே கணிக்க முடியும்.எனவே நீங்களாகவே மருத்துவம் செய்துக்கொல்லாதீர்கள் 
திரும்பவும் இதை ஏன் சொல்கிறேன் என்றால் உங்கள் உடல் மேலும் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளது.
                                          இன்னுமொரு தகவல் உங்களுக்கு பல நாள் முன் வழங்கிய மருந்தை  மீண்டும் அதே பிரச்சனைக்காக நீங்களே எடுத்துகொள்வதும் சரியாகாது, மேலே சொன்ன ஒருவரிடம் சிறிய ஆலோசனை தேவை,இதனால் ஒன்றும் பாதிப்பு வந்துவிடாதே
                                           நீங்கள் கேட்கலாம் அட என்னப்பா இது ஒரு தலை வலி வந்தால் கூட கேட்டு தான் ஆகா வேண்டுமா என்று.அதாவது ஒரு சில நேரங்களில்,  விளம்பரம் செய்யப்படுகின்ற மருந்துகளை மற்ற மருந்தோடு சேர்க்காமல் தனியாக வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்

27 Oct 2013

நோய் எதிர்ப்பு சக்தி

                                                                                                                                                                  
ஒரு சிலருக்கு அடிக்கடி ஒவ்வாமையால் தும்மல்,ஜலதோஷம்,சளி,இருமலை அவதிப்படுவர் அவர்களுக்கான பதிவு.





அடிக்கடி தும்மல் ஜலதோஷம் இருமல் காச்சல் உங்களை  வதைக்கிறதா இந்த பதிவை படிக்கவும்.  ஒவ்வாமையால் சிலருக்கு அடிகடி தும்மல்,சளி  தொடர்ந்து இருமல்  காய்ச்சல் ஏற்படும் அவர்கள் தினமும் ஒரு முழு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு இந்த சீதோஷன நிலை மாற்றத்தினால் ஏற்படும்  பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்                                 

  மேலும் உடல் பலவீனம் சோம்பல் உற்சாகமின்மை தூக்கமின்மை பசியின்மை அஜீரணம் செரியாமை போன்ற பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.                                   தினமும் ஒரு நெல்லிகாயை சாப்பிட பிடிக்காதவர்கள் அல்லது நேரம் இல்லாதவர்கள் புளிப்பு மற்றும் கசப்பு சுவை விரும்பாதவர்கள் நெல்லிக்காய் லேகியம் வாங்கி வீட்டில் வைத்து தினமும் காலை மாலை இருமுறை ஒன்றிரண்டு மேஜை கரண்டி (டீஸ் ஸ்பூன்)  சுவையாக சாப்பிடலாம் நெல்லிக்காய் லேகியம் இப்பொழுது அணைத்து ஆங்கில மற்றும் நாட்டு மருந்து கடைகளிலும் மலிவாக கிடைக்கிறது                                   ஆனால் நெல்லிக்காய் லேகியத்தை தரமான தயாரிப்பு கம்பெனியில் தெரிவு செய்ய வேண்டும் மேலும் இதற்க்கு எந்த பத்தியமும் கிடையாது. குழந்தைகள் முதல் தாத்தா பாட்டி வரை அனைவருக்கும் ஏற்றது 
                                   பித்த வாந்தி மற்றும் பயணங்களினால் ஏற்படும் வாந்தி மற்றும் உடற் சோர்வு போன்ற பல பிரச்சனைகளில் இருந்தும் தீர்வு அளிக்கும்.

22 Oct 2013

முகப்பு

  

           "ப்ரொபஷனல் பார்மசிஸ்ட் தளத்திற்கு வருகை தந்ததிற்கு நன்றி".

               இந்த தலத்தில்உங்களுடைய மருந்துகள்,மருத்துவம் மற்றும் நோய்களை பற்றிய சந்தேகங்களை நீங்கள் விளக்கி கொள்ளலாம்.நேரிலோ அல்லது மற்றவர்கள் முன்னிலையிலோ உங்களின் தேவைகளை அறிந்துக்கொள்ள தயங்குபவர்கள் மேலும் பலருக்கு இத்தளம் பனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.


                                                                                                               YOGESHKUMAR
                                                                                                                   pharmacist,